அருண்விஜய்யின் யானை படத்திலிருந்து வெளியான வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

 வாரிசு நடிகர் அருண்விஜய் :

பிரபல நடிகர் விஜகுமாரின் மகன் அருண்விஜய்.. வாரிசு நடிகரான இவர் பல ஆண்டுகளாக தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான செக்க சிவந்தது வானம், தடம் உள்ளிட்ட படங்கள் பாராட்டுகளை பெற்றது. அதோடு என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாகவும், சாஹோவில் பிரபாஸுக்கு வில்லனாகவும் மாஸ் காட்டினார் அருண்விஜய்.

சமீபத்தில் இவர் தனது மகனுடன் நடித்த ஓ மை டாக் என்னும் படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது அருண்விஜய் தனது சகோதரி கணவரான ஹரி இயக்கத்தில் யானை என்னும் படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு...நயன்தாராவை கரம் பிடித்த கையோடு ..விக்கிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ஒலிம்பியட் போட்டியை இவர் தான் இயக்குறாராம்?

ஹரியை புறக்கணித்த சூர்யா :

சூர்யாவின் சிங்கம் சீரிஸை வழங்கி ரசிகர்களை குஷிப்படுத்தியிருந்த ஹரி மீண்டும் அதே நாயகனை வைத்து யானை என்னும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதற்கும் துணிந்தவன், வாடிவாசல், பாலா உடன் ஒரு படம் என அடுத்தடுத்து கமிட் ஆனா சூர்யா, இயக்குனர் ஹரிக்கு பச்சை கொடி காட்டாமல் ஜகா வாங்க வந்ததால். கடுப்பான ஹரி தனது மைத்துனனை மாஸ் நாயகனுக்கும் முயற்சியில் இறங்கினர்.

யானை (yaanai) பட்டாளம் :

முதல் பிரகாஷ் ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரும் பின்வாங்கியதால் அருண்விஜய்க்கு வில்லனாக சமுத்திரக்கனியை இறக்கினார் இயக்குனர். இதில் ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, அம்மு அபிராமி, கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜு, ராதிகா சரத்குமார், ஆடுகளம் ஜெயபாலன், இமான் அண்ணாச்சி, ராஜேஷ், ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், சஞ்சீவ், புகழ் ஆகியோர் நடித்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு...ப்ளீஸ் இதை சாப்பிடாதீங்க..மீனா வீட்டில் வேதனையுடன் பேசிய மன்சூர் அலிகான்!

யானை புதிய வீடியோ :

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கோபி மற்றும் ஆண்டனி முறையே ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முமேற்கொண்டுள்ளனர். நாளை வெளியாகவுள்ள யானை படத்திலிருந்து புதிய கிளிப்ஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நாயகன் மற்றும் நாயகியின் காட்சிகள் உள்ளன. 

மேலும் செய்திகளுக்கு...டாப் 10 நாயகியாகும் பிரியா பவானி..முன்னணி ஹீரோக்களுடன் இத்தனை படங்களா?