Tamil actresses latest interview
நடிகை சுனைனா விஜய் ஆண்டனியுடன் நடித்திருக்கும் காளி திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரைக்குவர இருக்கிறது. இந்த தருணத்தில் விஜயுடன் தெறி திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தை ஒரு பேட்டியின் போது பகிர்ந்திருக்கிறார் சுனைனா.
தெறி படத்தில் சுனைனா சில நிமிடங்கள் தான் திரையில் தோன்றுவார். என்னதான் தளபதி விஜயுடன் மிகச்சிறிய ரோலில் நடித்தாலும், அது எனக்கு மறக்க முடியாத அனுபமாக இருந்தது. என தெரிவித்திருக்கிறார் சுனைனா.
தெறி படத்தில் விஜயை அண்ணா என அழைத்தது மட்டும் சுனைனாவிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்ததாக தெரிவித்த அவர், விஜய் மற்றும் அட்லீயுடன் பணியாற்றிய அந்த இரண்டு நாட்களையும், தன் வாழ்நாளில் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு நல்ல அனுபவமாக தனக்குத் தெறி படபிடிப்பு அமைந்தது என தெரிவித்திருக்கிறார் சுனைனா.
