Tamil actor open talk about his latest show

சமீபத்தில் சின்னத்திரையில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம், ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தான். பல பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், ஆர்யா தனக்கான மனைவியை தேர்ந்தெடுக்கப் போகிறார். என நிகழ்ச்சியின் துவக்கத்தில் தெரிவித்திருந்தனர்.

நிகழ்ச்சியும் நாள் தோறும் புதுக்குழப்பத்துடன் வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்தது. கடைசியில் ஒரு பெண் தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார். ஆனால் அவரை மணந்து கொள்ள முடியாது. என நைசாக கழண்டு கொண்டார் ஆர்யா. இது தான் நாங்கள் எதிர்பார்த்தது என்பது போல, பல ஊடகங்களும் இந்த நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்டட் ஷோ. எல்லாம் முன்னரே தீர்மானித்த படி தான் நடந்தது. என சமூக ஊடகங்களில் கிழி கிழி என கிழித்துத் தொங்கவிட்டு விட்டன எங்க வீட்டு மாப்பிள்ளையை.

ஆர்யாவிடம் இது குறித்து நேரிலேயே பலர் கேள்வி எழுப்பி கலாய்த்திருக்கின்றனர். சமீபத்தில் கூட ஒரு தொகுப்பாளர் பேட்டியின் போது, நீங்க மட்டும் எப்போதும் ஜாலியா பெண்களுடன் இருக்கீங்க, என கூறி ஆர்யாவை கலாய்த்தார். அதற்கு ஆர்யா , அட என்ன பாஸ் நீங்க எல்லாம் ஃபோன்ல மறைச்சு செய்யறத, நான் வெளிப்படையா செஞ்சேன். எனக்கூறி ஆஃப் ஆக்கி இருக்கிறார் அந்த தொகுப்பாளரை.