Tamil actor appreciates Tamil actress for her performance in her latest movie

நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரி தேவியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ்-ன் நடிப்பை பார்த்து மூத்த கலைஞர்கள் ,இன்றைய தலைமுறை கலைஞர்கள் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

நடிகையர் திலகம் படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சண்டகோழி-2, சாமி-2 போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். தளபதி விஜயுடன் தளபதி 62 திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

பொதுவாகவே தளபதி விஜய் யாரிடம் திறமையைக் கண்டாலும் பாராட்டுவதற்கு தயங்காமல் மனமாற பாராட்டுபவர். நடிகையர் திலகம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்த விஜய், சமீபத்தில் நடைபெற்ற தளபதி 62 படப்பிடிப்பின் போது, கீர்த்தி சுரேஷை நேரில் பாராட்டி இருக்கிறார். தளபதியிடம் இருந்து தனக்கு கிடைத்த பாராட்டால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.