30 வயதை கடந்து 31ல் அமோகமாக அடியெடுத்து வைத்திருக்கிறார் வெள்ளையழகி தமன்னா. இந்த நேரத்தில்தான் ஆடிக்காற்றில் வரவேண்டிய அதிர்ஷ்டக்காற்று லெஜண்ட் சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சி வடிவில் அடிக்கத் தொடங்கி இருக்கிறது. 

பொருத்தமாக மாப்பிள்ளை கிடைத்தால் உடனே கல்யாணம்தான் என்று தன் திருமண செய்தி குறித்த கேள்விக்கு அடிக்கடி வெட்கப்படும் தமன்னாவுக்கு, சினிமா கதவுகள் அடைக்கப்பட்டால் தானே அந்த நல்ல விஷயமான டும்டும்டும் நடக்கும்?

அந்த வேலையை அவரே முன்னெடுப்பார் போல தெரிகிறது. யெஸ்... லெஜன்ட் சரவணா அண்ணாச்சி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது தமன்னாதான். நயன்தாரா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் என்று ஏரியாவில் பட்டாம்பூச்சிகளாக திகழ்கிற அத்தனை பேருக்கும் வலை வீசிய அருள், அவர்களிடமிருந்து வந்த பதில்களால் அப்செட் ஆனது தனிக்கதை. ஆனால் கடைசியில் அந்த தங்க சிறகை கைப்பற்றி விட்டார். இதற்காக தமன்னாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஐந்து கோடி என்கிறது தமிழ் சினிமா வட்டாரம். 

ஆக மொத்தத்தில் லெஜண்ட் அண்ணாசி ஜோடியாக நடித்து முடித்து விட்டு அடுத்து நிஜ வாழ்க்கையில் வேறொருவருடன் இணைவது உறுதியாகி இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இப்போதே அப்ளிகேஷன்களை தட்டிவிட்டால் அண்ணாச்சி படத்தை முடித்துவிட்டு ஹாயாக இருக்கப்போகும் தமன்னா நிராகரிக்க வாய்ப்பில்லை.