Asianet News TamilAsianet News Tamil

“இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கனும்”... தியேட்டர் உரிமையாளர்களுக்கு எதிராக கொதித்தெழுந்த டி.ஆர்....!

இதையடுத்து சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து டி.ராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

T Rajendar the President of Chennai, Tiruvallur, and Kanchipuram Distributors Association Statement
Author
Chennai, First Published Sep 9, 2020, 1:04 PM IST

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான பாரதிராஜா நேற்று தமிழக திரையரங்கு உரிமையாளர்கலுக்கு பல்வேறு கோரிக்கைகளுடன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். Qube கட்டணத்தை செலுத்த முடியாது, தியேட்டரில் வெளியாகும் விளம்பரங்களில் தயாரிப்பாளருக்கு பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்காவிட்டால் புது படங்களை வெளியிடுவது சாத்தியமில்லாததாக மாறிவிடும் என தெரிவித்தார். 

T Rajendar the President of Chennai, Tiruvallur, and Kanchipuram Distributors Association Statement

இதையடுத்து சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து டி.ராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  QUBE, UFO, SCRBBLE நிறுவனங்கள் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரிடமிருந்து வசூல் செய்யும் தொகை குறித்து திரையரங்க உரிமையாளருக்கு வைக்கும் கோரிக்கை

, 1. திரையரங்க உரிமையாளர் அவர்கள் சொந்த செலவிலேயே Digital Projectorகளை அமைத்து கொள்ளுதல் அவர்களது கடமை மற்றும் உரிமை. அதை எந்த நிறுவனத்திடம் பெறுகிறார்களோ, அதற்கு உண்டான தொகையை மொத்தமாகவோ, தவணை முறையிலோ அவர்கள் தான் செலுத்த வேண்டும்.

2. VPF Charges  என்ற பெயரில் தயாரிப்பாளர்களிடம் / விநியோகஸ்தர்களிடம் எந்த தொகையும் பெறக்கூடாது மற்றும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இதன் மூலம் பல ஆயிரம் கோடி இங்கிருந்து செலுத்தப்பட்டுள்ளது.

3. மேலும் உலகம் முழுவதும் VPF கட்டணம் ரத்தாகி இரண்டு ஆண்டுகளாகிறது. ஆனால் நமது இந்திய நாட்டில் மட்டும் இந்த கொடுமை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

4. இதை ரத்து செய்வதன் மூலம் சிறி படததயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்களுக்கு சுமார் 100 பிரதிகளுக்கு ரூபாய் 25 லட்சங்கள், பெரிய படங்களின் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்களுக்கு சுமார் 500 பிரதிகளுக்கு ரூபாய் 1 கோடி 25 லட்சங்கள், 1000 பிரதிகளுக்கு ரூபாய் 2 கோடி 50 லட்சங்கள் வரை படத்தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் பல கோடி ரூபாய் இதன் மூலம் பயன் அடையலாம். 

எனவே வருங்காலத்தில் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்கள் யாரும் VPF தொகையை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது என்ற கோரிக்கையினை வைக்கின்றோம். தேவைப்பட்டால் படத்தின் பிரதியை Hard Diskல் கொடுத்து விடுகின்றோம். அதற்கான செலவு குறைந்தது ரூபாய் 500/- முதல் 1000/- வரை தான் ஆகும். அதனை நாங்கள் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் கலந்து பேசி ஏற்றுக் கொள்கின்றோம்.

குறிப்பு: மேற்படி கோரிக்கையினை தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் நலன் கருதி திரையரங்க உரிமையாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் சரியானது என்று கருதும் இந்திய அளவில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் தங்களின் கருத்தினை சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்கின்றோம். (Mail ID - cktdfdass@gmail.com)
 

Follow Us:
Download App:
  • android
  • ios