t rajendar angry talk about rajini
மத்திய அரசின் ஜிஎஸ்டி நடைமுறைக்கு ரஜினி என்ன சொல்ல போகிறார் என டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் மாநில மொழிப்படங்களுக்கு அழியும் ஆபத்து உருவாகியுள்ளதாக திரைப்பட நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் டி. ராஜேந்தர் கூறியதாவது:-
தமிழகத்தில் கேளிக்கை வரி இல்லை என்றாலும் சின்ன பட்ஜெட் படங்கள் ஓடவில்லை. இந்த நிலையில், திரைப்படத்திற்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்தால் சின்ன பட்ஜெட் படங்கள் எப்படி ஓடும்.

இவ்வளவு வரியை சுமத்தினால் தியேட்டருக்கு எப்படி மக்கள் வருவார்கள். தியேட்டரில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையும் மிக அதிகமாக உள்ளது.
மத்திய அரசு தற்போது விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிப் படங்கள் அழியும் ஆபத்து உருவாகியுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு தமிழ் திரையுலகத்தை நசுக்கிவிடும். பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தலையில் வரி வதிக்க பிஎச்டி பட்டம் பெற்றுள்ளார். மழை வந்த பின் வெள்ள பாதிப்பு குறித்து யோசிப்பது போல ஜிஎஸ்டி வரி விதிப்பு வந்த பிறகு தமிழ் திரையுலகம் காலம் கடந்து போராடுவதாக உள்ளது.
தமிழ் மக்களுக்காக வாழ்வதாக கூறும் ரஜினி, விரைவில் அரசியலுக்கு வருவதாக பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி, இந்த ஜிஎஸ்டி வரிக்கு என்ன குரல் கொடுக்க போகிறார்.
இவ்று அவர் கூறினார்.
