‘சிம்புவின் திருமணம் இறைவன் அருளால் விரைவில் நடக்கும். இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும்போதெல்லாம் மனம் கலங்குகிறது. என் விதியை நினைத்து நொந்துகொள்கிறேன்’ என்று கண் கலங்கியபடியே பதிலளித்தார் நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர்.

டி. ஆரின் இளையமகன் குறளரசன் நபீலா அகமதுவின் திருமணம் கடந்த 16ம் தேதியும் ரிசப்ஷன் நேற்று 29ம் தேதியும் நடந்து முடிந்த நிலையில், அந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் பத்திரிகையாளர்களை அழைக்க முடியாமைக்கு வருத்தம் தெரிவிப்பதற்காக தனது தி.நகர் இல்லத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் குறளரசன் திருமணத்துக்கு தான் ஏன் ஒப்புக்கொண்டேன் என்று விளக்கிய டி.ஆர்,’நான் சினிமாவில் மட்டும் எம்மதமும் சம்மதம் என்று சொல்பவனல்ல. எல்லாப் பெற்றோர்களுமே பிள்ளைகளின் நலன்களுக்காக வாழ்பவர்கள்தான். என் மகன் அவன் விரும்புகிற பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு நான் ஏன் தடையாக இருக்கவேண்டும்’ என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு சில நிருபர்கள் சிம்புவின் திருமணம் குறித்துக் கேள்வி கேட்கத் துவங்கியவுடன் தனது கண்களில் பெருகி வந்த கண்ணீரைத் துடைத்தபடியே பதில் சொன்ன டி.ஆர்,’ இறைவன் அருளால் சிம்புவின் திருமணம் சீக்கிரமே நடக்கும். இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும்போதெல்லாம் மிகவும் தர்ம சங்கடமாக இருக்கிறது. என் விதியை நினைத்து நொந்துகொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்றார்.