swathi murder related movie
கடந்த வருடம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், பட்ட பகலில் அரங்கேறிய கணினி பொறியாளர் ஸ்வாதி கொலையின் கதையை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.
அந்த அளவிற்கு தமிழகத்தையே உலுக்கியது இவருடைய கொலை சம்பவம்.
இந்நிலையில் இவருடைய கொலை வழக்கை மையப்படுத்தி எஸ்.டி. ரமேஷ் என்பவர் சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் ஒரு படம் இயக்கியிருந்தார்.
இதுகுறித்த அறிந்த ஸ்வாதியின் தந்தை. இந்த படம் வெளிவந்த தன்னுடைய குடும்பம் மனரீதியாக பாதிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இந்த நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து படம் எடுத்ததாகவும், ஸ்வாதியின் தந்தை கொடுத்த புகார் சம்பந்தமாகவும் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வருகிற 21 தேதிக்கு ஒத்திவைத்தார். அது வரை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் கைது செய்யக்கூடாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
