swathi movie director issue
கடந்த வருடம் சென்னை மட்டும் இன்றி, ஓட்டு மொத்த தமிழகத்தையே உலுக்கியது கணினி பொறியாளர் ஸ்வாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் வெட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவம்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இளைஞர் ராம்குமார் புழல் சிறையில் அடைக்காப்பு, மின் கம்பியை கடித்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்நிலையில் ஸ்வாதியை மையப்படுத்தி விஜயகாந்த் நடித்த உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் ஸ்வாதியின் கொலை வழக்கு என்கிற பெயரில் படத்தை இயக்கி இருந்தார்.
தற்போது ஸ்வாதியின் தந்தை தன்னுடைய அனுமதி பெறாமல், இயக்குனர் இந்த படத்தை எடுத்துள்ளதாக கூறி அவர் மீது சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த படம் வெளிவந்தால் தன்னுடைய குடும்பத்தினர் மனரீதியாக மதிக்கப்படுவார்கள் ஆகையால் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்ட விரோதமாக இந்த திரைப்படம் எடுப்பது நீதிமன்ற அவமதிப்பு எனவே இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
