பிரபல நடிகர், சுஷாந்த் சிங் தற்கொலை பாலிவுட் திரையுலகில் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தாய் மாமா, தன்னுடைய மருமகன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை என்றும், அவரை யாரோ கொலை செய்துள்ளனர் என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

34 வயதே ஆகும் பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த்சிங்கின் மரணம், இந்தி திரையுலகினரை மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என அணைத்து மொழி திரையுலகை சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய தற்கொலைக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என பிரபலங்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். மன அழுத்தம் காரணமாக, சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டிருக்காமல் என கூறப்பட்டு வரும் நிலையில் இவருடைய தாய் மாமா, சுஷாந்த் சிங் மிகவும் தைரியமானவர், தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை என்றும், அவரை யாரோ கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தை தெரிவித்துள்ளார். 

இதனால் இவருடைய தற்கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் சுஷாந்த்சிங்கிற்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தற்போது வலியுறுத்தி வருகிறார்கள். 

அதே நேரத்தில், போலீசார் சுஷாந்த் வீட்டை சோதனையிட்டதில்... அவர் தற்கொலை செய்து கொள்ள போவதாக எழுதி வைத்த கடிதமோ, அல்லது வேறு எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் போலீசார் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்திலும் இந்த வழக்கை விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.