யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'பியார் பிரேமா காதல்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் இளன் இயக்கி இருக்கிறார்.

இந்த வாரம் வெளியான இந்த படத்தின் கதை மிகவும், வித்தியாசமாக இருப்பதாகவும் பிக்பாஸ் ரைசா ஓவர் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த படத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் சுசீந்திரன்... இந்த படத்தில் சில நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்கள் இருப்பதால் இது கலாச்சாரா சீரழிவுகளை ஏற்படுத்துவதாக உள்ளது என கூறியுள்ளார்.

இருப்பினும் முதல் தயாரிப்பிலேயே யுவன் வெற்றி பெற்றுள்ளார். இயக்குனர் தன் வசனங்கள் மூலம் காட்சியை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார். படத்தின் மிகபெரிய பலமே யுவனின் இசை. இரண்டாவது ஹரிஷ் கல்யாணின் எதார்த்தமான நடிப்பு என்றும் இயக்குனர் இளன் கடைசி 20 நிமிடங்களில் உணர்வு பூர்வமாக இயக்கியுள்ளார் என பாராட்டியுள்ளார்.

மேலும் இந்தப்படத்தை கலாச்சாரச் சீரழிவு என்றும் கூறலாம். இப்படியொரு கலாச்சாரா காதல் நடைமுறையில் இருக்கிறது என்றும் வாதம் செய்யலாம். ஆனால் ஒட்டுமொத்தத்தில் அனைவரும் சேர்ந்து ஒரு வெற்றிப்படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளனர் என கூறியுள்ளார் சுசீந்தரன்.