'இறுதிச்சுற்று' புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில், மாறா என்ற கேரக்டரில் சூர்யா நடித்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கும் சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. அடுத்தகட்டமாக டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆக இருந்த அதே தேதியில் தான் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் ரிலீஸ் ஆக  இருந்தது. ஆனால் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை தற்போது படம் மே 1ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதற்கு காரணம் மாஸ்டர், சூரரைப் போற்று இரண்டுமே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படங்கள். ஒரே தேதியில் இரண்டு படத்தையும் ரிலீஸ் செய்தால் வசூலில் கல்லா கட்டுவது சிரமமாகிவிடும். இதற்கு முன்னதாக எவ்வித போட்டியும் இல்லாமல் சோலோவாக ரிலீஸான சூப்பர் ஸ்டாரின் தர்பார் படமே மிகப்பெரிய வசூலை எட்ட முடியாமல் சிக்கித் தவித்தது. இதையெல்லாம் கணக்கில் கொண்டே தேதியை மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.