நடிகர் சூர்யா நடிப்பில் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ள திரைப்படம், 'சூரரை போற்று'. கடந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளியான, காப்பான் மற்றும் NGK  ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றி பேராதனால், இந்த வருடமாவது தன்னுடைய முதல் ரிலீசிலேயே வெற்றி பயணத்தை சூர்யா தொடர்வார் என்ன நம்பி காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

அந்த வகையில், சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'சூரரை போற்று'. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தை, 'இறுதி சுற்று' படத்தை இயக்கிய பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த படத்தை 2 டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஷிகியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். நிகீத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக 'சர்வம் தாளமயம்' படத்தில் நடித்தவர்.

இந்நிலையில் தற்போது சூர்யா நடித்துள்ள, 'சூரரை போற்று' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் 6000 ரூபாயை கையில் வைத்து கொண்டு ஏரோ பிளைன் கம்பெனி வைக்க போராடும் அவர் கடைசியில் அதனை வைத்தாரா...? அதற்க அவர் படும் பாடு பற்றி தான் இந்த படம் பேசும் என்ன தெரிகிறது

 அந்த டீசர் இதோ...