ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்த பிறகு பல வருடம் திரையுலகை விட்டு விலகியே இருந்தார். இந்நிலையில் 2015ம் வருடம் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

36 வயதினிலே படம் ஹிட்டாக அமைந்ததால் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து ஜோதிகா தற்போது, மகளிர் மட்டும் படத்தில் நடித்து வருகிறார் 80% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது, இதில் ஜோதிகா மாயாவி படத்திற்கு பின் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்.

இந்த படத்தை குற்றம் கடிதல் படத்திற்கு தேசிய விருது பெற்ற, இயக்குனர் பிரம்மா இயக்கி வருகிறார், இசையமைப்பாளர் ஜிப்ரன் இசையமைத்துவருகிறார்.

மேலும் மனைவி ஜோதிகா நடித்து வரும் இந்த படத்திற்காக, சூர்யா தனது சொந்த குரலில் பாடல் பாடியுள்ளதாக கூறப்படுகிறது.