சூர்யா-ஜோதிகா நட்சத்திரத் தம்பதிகளின் மகன் தேவ் தேசிய அளவிலான கராத்தே போட்டி ஒன்றில் வென்று அசத்தியுள்ளார். மகன் கராத்தேவில் சாதிப்பதை நேரில் காண்பதற்காக சூர்யா படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு டெல்லி வந்தார்.

சூர்யா-ஜோதிகா தம்பதியினருக்கு தேவ் என்கிற மகனும் தியா என்கிற மகளும் உள்ளனர். தற்போது பள்ளிப்படிப்பைப் பயின்று வரும் தியா விளையாட்டில் சுட்டியாக உள்ளார். ஏற்கெனவே மாநில அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டியில்  பங்கேற்று வெற்றிபெற்ற தியா இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜிடமிருந்து கோப்பையை வாங்கியுள்ளார். அப்போது தியாவை பார்த்து ஜோதிகா ஆனந்த கண்ணீர் விடும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றும் சமூகவலைதளங்களில்  வெளியாகி வைரலானது.

 தியாவுக்கு நான் கொஞ்சமும் சளைத்தவன் அல்ல என்று நிரூபித்தார் தேவ். இன்று ஷேன் இஸ்ரின்யூ அகாடமி தேசிய அளவில் டெல்லியில் கராத்தே போட்டி நடந்தது. தேசிய அளவில் நடந்த இந்த போட்டியில் நாற்பதுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் தண்டர் கிக் பிரிவில் சூர்யாவின் மகன் வெற்றி பெற்றார்.

இந்த போட்டியைக் காண சூர்யா ,மனைவி ஜோதிகாவுடன் வந்திருந்தார் .மகள் தியாவும் வந்திருந்தார்.இந்த போட்டியைக் காண்பதற்காகவே இந்தோனேஷியாவில் ‘காப்பான்’படத்தின் ஒரு பாடல் ஷூட்டிங்குக்காக இயக்குநர் கே.வ்.ஆனந்துடன்  சென்றிருந்த சூர்யா ஒரு நாள் மட்டும் ரத்து செய்துவிட்டு   டெல்லி வந்திருந்தார்.