இயக்குனர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் முதல் முறையாக உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படம் என்.ஜி.கே.

கடந்த ஆண்டு இப்படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில்,  ஒரு சில காரணங்களால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. நடிகர் சூர்யாவும், இப்படத்தின் மூலம் நல்ல கருத்தை தெரிவித்துள்ளோம். அதனால் திரைப்படம் லேட்டாகத்தான் வரும் என விடாப்பிடியாக பேசினார். இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு, மேலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

என்.ஜி.கே படத்தின், ஆன்லைன் புக்கிங் தொடங்கியதுமே அனைத்து டிக்கெட்டுகளும் ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. முதல் நாளே அனைத்து திரையரங்கங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இப்படம், சூர்யா மற்றும் செல்வராகவன் என இவருடைய டச்சும் இல்லாமல், உள்ளதாக ரசிகர்கள் வெளிப்படையாகவே தங்களுடைய  அதிருப்தியை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள். 

சூர்யாவின் நடிப்பும் செல்வராகவனின் இயக்கமும், என்.ஜி.கே படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்பது தான், பலருடைய எதிர்ப்பார்ப்பாக இருந்தது. ஆனால் இரண்டாம் பாதி எதார்த்தத்தை மீறிய காட்சியாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.  மொத்தத்தில் இது சூர்யாவின் படமாகவும் எடுத்து கொள்ள முடியவில்லை செல்வா ராகவனின் படமாகவும் பார்க்க முடியவில்லை என்பதே ரசிகர்களின் அதிருப்திக்கு காரணம்.