சென்னையே மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம்  'எதற்கும் துணிந்தவன்'  படப்பிடிப்பு இடைவிடாது  நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான சூர்யாவின் ஜெய் பீம் நல்ல வெற்றியை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் 'எதற்கும் துணிந்தவன்'. வரிசையாக ரஜினியின் அண்ணாத்த, விஜயின் பீஸ்ட் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பை தன் கையிலெடுத்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தையும் தயாரித்து வருகிறது. இதற்கு இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்து வருகிறார். சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மண் மனம் மாறாத கிராமத்து கதைகளை நகைச்சுவை தளும்ப கொடுக்கும் பாண்டிராஜனின் புதிய படைப்பான "எதற்கும் துணிந்தவன்" ஆக்சன் கலவையாக உருவாகிறது என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு திரையரங்கு திருவிழாவாக இந்த படம் இருக்கும் என சமீபத்தில் நடிகர் சூரி தெரிவித்திருந்தார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது சென்னையில் பிரபல படப்பிடிப்பு தளத்தில் பாடல் ஒன்றை படக்குழு படமாக்கி வருகிறது

கடும் மழையால் சென்னை முழுதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. கடந்த சில தினங்களால் பெய்து வரும் மழையால் அனைத்து துறைகளும் சம்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளிவர இயலாத அளவு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இத்தகைய சூழலில் நேற்று முதல் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் மழை காரணமாக சென்னையில் இன்று நடைபெற இருந்த பெரும்பாலான படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் நேற்று முதல் நடைபெற்று வரும் சூர்யா படப்பிடிப்பில் அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர் என கூறப்படுகிறது.