சமூக வலைத்தளங்களில், எல்லை மீறி... சர்ச்சைக்குரிய விதமாக பேசுபவர்கள் மீது உடனடியாக மும்பை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தற்போது சூர்யா பட நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் சூர்யா, நடிப்பில்... கடந்த 2010 ஆம் ஆண்டு, இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ரத்த சரித்திரம்'. இந்த படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் அஜாஸ்கான்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களிடம் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில், நேரடியாக பிரபலங்கள் உரையாடி வரும் நிலையில், இவரும் பேசியுள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி சர்ச்சைக்குரிய வகையில் இவர் பதில் கூறியதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து.

இதனை அடுத்து போலீசாரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நடிகர் அஜாஸ்கானை,  மும்பை காவல்துறையினர் விசாரணை செய்து கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை வளர்க்கும் விதத்தில், பேசியதாக நடிகர் அஜாஸ்கான் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.