நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான என்.ஜி.கே திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், அடுத்ததாக அவர் நம்பி இருக்கும் திரைப்படம் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'காப்பன்' திரைப்படத்தை தான்.

இந்த படத்தில் பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார், வில்லனாக நடிகர் ஆர்யாவும், கதாநாயகியாக நடிகை சாயிஷாவும் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி, பொம்மல் இராணி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து அனைத்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் முடிக்கப்பட்டு  ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை தேதியை தற்போது அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.  அதாவது (ஜூலை 17 ) நாளை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 

ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் 'சிரிக்கி' பாடல் வெளியாகி ஹிட் ஆன நிலையில்,  மற்ற பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.