ஏற்கனவே ட்விட்டரில் உள்ள சூர்யா தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, இன்ஸ்டாகிராமில் இணைந்தார். இவர் இணைந்த 28  மணி நேரத்தில், வெறித்தனம் காட்டியுள்ளனர் சூர்யாவின் ரசிகர்கள்.

வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு, தமிழ் திரையுலகில் கால் பதித்தாலும், பல போராட்டங்கள் மற்றும் கஷ்டங்களை கடந்து, இன்று முன்னணி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சூர்யா. இன்று தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூர்யா, ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் இருக்கும் நிலையில், இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இன்று இணைந்துள்ளார்.

அப்பா மிகப்பெரிய நடிகராக இருந்தாலும், அவரின் எந்த ஒரு சிபரிசும் இல்லாமல் நடிப்பில் தனக்கென தனி இடத்தை பிடித்து கெத்து காட்டி வருவதோடு, வெற்றி தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் சூர்யா. சமீபத்தில் இவர், தன்னுடைய மனைவி ஜோதிகா நடிப்பில் வெளியான, 'பொன்மைகள் வந்தாள்' படத்தை தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக, ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க போராடி வரும் சூர்யா, தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், 'சூரரை போற்று' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கொரோனா பிரச்சனை முடிவுக்கு வருவதை வைத்தே, அது முடிவு செய்யப்படும் நிலை உள்ளது. 

இன்று தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூர்யாவின் ரசிகர்களை,குஷி படுத்தும் விதமாக இவர் நடித்துள்ள, சூரரை போற்று படத்தில் இருந்து, சூப்பர் ரொமான்டிக் பாடலான காட்டு பயலே பாடலின் 1 நிமிட வீடியோ வெளியானது. அதே போல் வாடி வாசல் படத்தின் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து தன்னுடைய பங்கிற்கு, சூர்யா செம்ம ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றையும், மனைவி ஜோதிகாவுடன் உள்ள புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். இவர், இன்ஸ்டாங்க்ராம் கணக்கு துவங்கிய 28 மணிநேரத்தில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ் இவரை பின்தொடர துவங்கி விட்டனர். 

மேலும் சூர்யா தற்போது 4 பேரை இதில் ஃபாலோ செய்கிறார். அதாவது தன்னுடைய சகோதரர் கார்த்தி, சகோதரி பிருந்தா, 2 டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம், மற்றும் அந்த நிறுவனத்தின் இயக்குனர் ராஜசேகர பாண்டியன் ஆகியோரை என்பது குறிப்பிடத்தக்கது.