இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சூர்யா ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா, கலையரசன், ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர். 

இசை:

சூர்யாவின் படத்திற்கு முதல் முறையாக இசையமைத்திருந்த அனிருத்தின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக சொடக்கு பாடல் சமூக வலைத்தளத்தில் நான்கு மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

சூர்யா கொடுத்த பரிசு:

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில், நடிகர் சூர்யா இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சர்ப்ரைஸாக சிவப்பு நிற டொயோட்டா கார் ஒன்றை பரிசாக கொடுத்தள்ளார். ஆனால் சூர்யாவின் இந்த செயல் தயாரிப்பளருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. காரணம் 'தானா சேர்ந்த கூட்டம்' கலவையான விமர்சனங்களை பெற்ற படமாக இருப்பதால் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப் படுகிறது.