Asianet News TamilAsianet News Tamil

சன்டிவி முன் சூழ்ந்த சூர்யா ரசிகர்கள்...! கலங்கடித்த “ஒரே ஒரு வார்த்தை”..!

Surya fans surrounds to sun tv to protest against vj works
Surya fans surrounds to sun tv to protest against vj works
Author
First Published Jan 20, 2018, 12:10 PM IST


சன்டிவி முன் சூழ்ந்த சூர்யா ரசிகர்கள்...! கலங்கடித்த “ஒரே ஒரு வார்த்தை”..!

நடிகர் சூரியா ரசிகர் மன்றத்தினர் சன் டிவியை கண்டித்து எம்ஆர்சி அலுவலகம் முன் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சன் மியூசிக் சேனல் சூரியாவை தனிப்பட்ட முறையில் கேலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் ரசிகர்கள் 
மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைத்து திரையரங்கங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Surya fans surrounds to sun tv to protest against vj works

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Surya fans surrounds to sun tv to protest against vj worksஇந்நிலையில் இந்த படத்தில் அமிதப்பச்சனுடன் இணைத்து சூர்யா நடிப்பதை கிண்டல் செய்யும் விதத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினிகள் இரண்டு பேர் அமிதாப் உயரத்தையும் சூரியாவின் உயரத்தையும் ஒப்பிட்டு, 'அமிதாப்புடன் சூர்யா நடிக்கும் போது ஸ்டூல் மீது ஏறி நின்று தான் நடிக்க வேண்டும் என்று கலாய்த்தனர்.

இவர்களின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தத்தோடு, பிரபலங்கள் கருணாகரன், விஷால், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில், சூர்யாவின் ரசிகர்கள், சன் மியூசிக் சேனலை கண்டித்து , நடிகர் சூரியா ரசிகர் மன்றத்தினர் சன் டிவியை கண்டித்து எம்ஆர்சி அலுவலகம் முன் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios