வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "அசுரன்" திரைப்படம் 100 நாட்களை கடந்துள்ளது. படத்தை பார்த்த அனைவருமே அதனை கொண்டாடினர். இந்தி, தெலுங்கு நடிகர்களிடம் இருந்தும் வெற்றிமாறன், தனுஷுற்கு பாராட்டுக்கள் குவிந்தன. அப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க ஷாருக்கானும், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வெங்கடேஷ், மகேஷ்பாபு உள்ளிட்டோரும் போட்ட போட்டி போடுவதாக தகவல்கள் வெளியான. 

தற்போது தெலுங்கு "அசுரன்" ரீமேக்கில் வெங்கடேஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டு, ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறன. அடுத்தாக சூர்யா -  வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திற்கு "வாடிவாசல்" என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே "ஆடுகளம்" படத்தில் சேவல் சண்டையை மையமாக வைத்து தெறிக்கவிட்ட வெற்றிமாறன், "வாடிவாசல்" படத்தில் ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட கதையை படமாக்க உள்ளார். 

உலக அளவில் தமிழகர்களை தலை நிமிர வைத்த மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து, மக்களுக்கு ஜல்லிக்கட்டு மீதான பற்றும், பாசமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் வெற்றிமாறன் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து படம் எடுக்கிறார், அதில் சூர்யா நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு ரசிகர்களை செம்ம உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதற்கு முன்னதாக வெளியான "சூரரை போற்று" டீசரைப் பார்த்து திக்குமுக்காடிய சூர்யா ஃபேன்ஸ் இந்த அறிவிப்பால் உற்சாகத்தில் மிதக்கின்றனர். இதையடுத்து #Vadivaasal என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.