surya and karthi working in magalirmattum movie
பிரபல நடிகை ஜோதிகா நடித்து முடித்துள்ள 'மகளிர் மட்டும்' படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் மிகச்சிறப்பாக வெளியானது. முதல்கட்ட விமர்சனத்தில் ஜிப்ரானின் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் இந்த படத்தில் சூர்யாவின் சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்தியும் பணிபுரிந்துள்ளார் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
ஆம், இந்த படத்தின் பாடல் ஒன்றை கார்த்தி பாடியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'குபு குபு குபு' என்று தொடங்கும் பாடலை அவர் பாடியுள்ளார்.
இந்த பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். கார்த்தி மட்டுமின்றி இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர்களும் பாடியுள்ளனர்.
