நடிகர் சூர்யா மற்றும் , கார்த்தி இணைந்து நடத்தும் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி கோயம்புத்தூரில் 3 நாட்கள் நடைபெற இருக்கிறது .
தந்தையும் நடிகருமான சிவகுமாரின் 75–வது பிறந்தநாளை சென்னையில், அவர் வரைந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி விழா நடத்தி சூர்யா மற்றும் கார்த்தி தந்தையை மகிழ்வித்தனர்.
மேலும் இந்த கண்காட்சியை பல பொதுமக்களும், சினிமா பிரபலங்களும் சிவகுமாரின் ஓவிய திறமையை கண்டு வியர்ந்தனர்.
இதனைதொடர்ந்து, தற்போது இதே போல் வரும் 14,15,16 தேதிகளில் கோயம்புத்தூர் மக்கள் கண்டுகளிக்கும் விதமாக அங்கும் இதே போல் ஒரு கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம் .
இந்த கண்காட்சி 14–ம் தேதி மாலை 5 மணி முதல் 8 மணி வரையும், 15,16 தேதிகளில் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணிவரையும் நடைபெறுகிறது.
நடிகர் சூர்யா,மற்றும் கார்த்தி இணைந்து நடத்தும், சிவகுமாரின் சித்திரச்சோலை ஓவியகண்காட்சியில் தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை சிவகுமார் நேரில் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி நடைபெறும் இடம்: G.D. அரங்கம், எண்: 734 பிரசிடன்ட் ஹால், அவினாசி ரோடு, மேலும் இதில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க படுவதால் கோயபுத்தூர் மக்கள் செம குஷியில் உள்ளனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:58 AM IST