surya and karthi acting with pandiraj direction

தமிழ் சினிமாவில் தரமான கதைகளை தேர்தெடுத்து இயக்குபவர்களில் ஒருவர் இயக்குனர் பாண்டிராஜ்.

இணைக்க முடியாத ஜோடிகளாக இருந்த 'சிம்பு' , 'நயன்தாராவையே' தான் இயக்கிய, 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இணைந்து நடிக்க வைத்தார்.

இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களாக அண்ணன் தம்பிகளை இணைந்து நடிக்க வைக்க பலர் முயற்சி எடுத்து வந்தனர். இதனை தற்போது சாத்தியமாக்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

தற்போது இவர் ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்கி வரும் 'செம' படத்தை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக நடித்து வரும், சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து இணைத்து இவர் படமெடுக்க உள்ளதாக தெரிகிறது. இந்த திரைப்பாதை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில், இந்த திரைப்படம் குறித்து அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.