Asianet News TamilAsianet News Tamil

புதிய கல்வி கொள்கையை எதிர்க்கும் நடிகர் சூர்யா!

நடிகர்  சிவகுமார் கடந்த 40 ஆண்டுகளாக நடத்தி வரும்,  அறக்கட்டளை மூலம், ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த  மாணவ, மாணவர்களுக்கும்,  விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார்.
 

surya against new education policy
Author
Chennai, First Published Jul 13, 2019, 3:55 PM IST

நடிகர்  சிவகுமார் கடந்த 40 ஆண்டுகளாக நடத்தி வரும்,  அறக்கட்டளை மூலம், ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவர்களுக்கும்,  விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார்.

இந்த ஆண்டிற்கான விழா இன்று, சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் நடந்தது. நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை இணைந்து இந்த விழாவில் மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து கௌரவித்தனர்.

surya against new education policy

இந்த விழாவில், புதிய கல்விக்கொள்கை குறித்து நடைபெற்ற கருத்தரங்கத்தில் நடிகர் சூர்யா பேசுகையில்...

தகுதித்தேர்வு, நுழைவுத்தேர்வில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது.  ஓராசிரியர் பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரி அல்ல. ஓராசிரியர் பள்ளியை மூடினால் மாணவர்கள் எங்கே செல்வார்கள்.

சமமான கல்வியை கொடுக்காமல் கல்வி தரத்தை எப்படி உயர்த்த முடியும். புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். 30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது புதிய கல்விக்கொள்கை.

surya against new education policy

ஆரம்ப கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்க கூடாது. பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும். 5ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தினால் இடை நிற்றல் அதிகரிக்கும். 6.5 கோடி மாணவர்கள்  பள்ளிபடிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர் இல்லை. 

ஆசிரியர் இல்லாமல் படிக்கும் மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள். கலை அறிவியல் கல்லூரியில் சேர புதிய கல்விக்கொள்கையில் நுழைவுத்தேர்வு உள்ளது.

கிராமப்பகுதிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகள் மூடப்படக்கூடிய அபாயம் உள்ளது. 50 ஆயிரம் கல்லூரிகளை 12 ஆயிரம் கல்லூரிகளாக குறைக்க முயற்சி நடக்கிறது.  கல்லூரிகளின் எண்ணிக்கையை குறைத்தால் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை எப்படி அதிகரிக்கும்.

60% மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள், புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது அவசியம்.  10-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள அரசு பள்ளிகளை மூடுவது சரியல்ல. இவ்வாறு நடிகர் சூர்யா பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios