Asianet News TamilAsianet News Tamil

இப்பதான அரபிக் குத்து வந்துச்சு! அதற்குள் டீசர் அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சன் பிக்சர்ஸ்

காதலர் தினத்தன்று விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் இருந்து அரபிக் குத்து (Arabic Kuthu) பாடலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ், தற்போது மேலும் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

suriyas etharkkum Thunindhavan movie teaser release date
Author
Tamil Nadu, First Published Feb 16, 2022, 12:05 PM IST

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா (suriya) ஹீரோவாக நடித்துள்ளார். ஏற்கனவே பாண்டிராஜ் (Pandiraj) இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan) நடித்துள்ளார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் (D Imman) இசையமைத்துள்ளார். 

suriyas etharkkum Thunindhavan movie teaser release date

தமிழில் தயாராகி உள்ள எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 

இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் வருகிற வெள்ளிக்கிழமை பிப்ரவரி 18-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு வெளிட்டுள்ளது. நேற்று முன்தினம் பீஸ்ட் படத்தில் இருந்து அரபிக் குத்து பாடலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ், தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios