suriya taliking about 24 movie

நடிகர் சூர்யா மூன்று வேடங்களில் நடித்து, சமந்தா, நித்தியமேனோன் மற்றும் பலர் நடித்த '24' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகியது. இந்த படத்தை இயக்குனர் விக்ரம் குமார் இயக்கி இருந்தார்.

சயின்ஸ் பிக்க்ஷான் படமாக வெளியான இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தது.

தற்போது ஒட்டுமொத்த '24' படகுழுவினருக்கும் உற்சாகம் கொடுப்பது போல அமைந்துள்ளது தேசிய விருது அறிவிப்பு.

இது குறித்து நடிகர் சூர்யா மிகவும் மகிழ்ச்சியில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 24 திரைப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் "திரு" மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர்களான "அமித் மறும் சுப்ரோ" ஆகியோரின் பணிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. தேசிய விருது குழுவினர் அனைவருக்கும் எங்களுடைய படக்குழுவினரின் சார்பாக நன்றி. 

ஏ.ஆர்.ரஹ்மான் சார் சொன்னது போல '24' எங்களுக்கு ஒரு முக்கியமான படம். அதை முடிப்பதில் எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தது. அவர்களுடைய முந்தைய படங்களுக்கும் சேர்த்து கிடைத்த ஒரு மரியாதையாகத் தான் பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.

மனதுக்கு பிடித்த ஒரு படத்துக்கு தேசியளவில் அங்கீகாரம் கிடைக்கும் போது ரொம்ப ஊக்குவிப்பாக இருக்கிறது. இது போன்ற மனது நெருக்கமான படங்களுக்கு செய்வதற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது. உங்கள் அனைவருடைய அன்புக்கும் நன்றி.