மனைவியுடன் ராதிகாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா..என்ன விசயம் தெரியுமா?...
ராதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் ராதிகாவை பார்ட்டிக்கு சென்றுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
80களில் கொடிகட்டி பறந்த நாயகிகளில் முன்னணியில் இருந்தவர் ராதிகா..இவரது கொஞ்சல் பேச்சுக்கு ரசிகர்கள் பட்டாளமே உண்டு. மலையாளம் , ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ள ராதிகா..சின்னத்திரையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியவர். இதுவரை ஆறு பிலிம்பேர் விருதுகள் தெற்கு , இரண்டு நந்தி விருதுகள் மற்றும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் பெற்றவர் .
90களுக்கு பிறகு சின்னத்திரை பக்கம் திரும்பிய ராதிகா சித்தி தொடரின் மூலம் ரசிர்களின் மனதில் பதிந்தார். பின்னர் தனது சொந்த தயாரிப்பில் பல நாடகங்களையும் தயாரித்துள்ளார். வாணி ராணியை தொடர்ந்து சித்தி 2வில் நடித்து வந்த ராதிகா சினிமாவில் மீண்டும் பிஸியான காரணத்தால் சின்னத்திரையை விட்டு விலகுவதாக அறிவித்தார். ராதிகா சிதைந்தொடர்ந்து தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் குணசித்திர வேடங்களில் ராதிகா நடித்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு... ஐஸ்வர்யாவை பிரிய மனமின்றி தவிக்கும் தனுஷ்?.பாடலில் காதல் சோகம் சொன்ன மாறன்..
அந்த வகையில் தற்போது பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் ராதிகா முக்கிய ரோலில் நடித்துள்ளார்..இது குறித்த புகைப்படங்களும் சமீபத்தில் வைரலானது. இந்த படத்தை சான் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, வினய், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திலிருந்து வெளியான சிங்கிள் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வைரலானது அதோடு 5 தென்னிந்திய மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ராதிகா சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ராதிகாவுடன் நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் அவரது நண்பர்கள் சிலர் உள்ளனர். நேற்று ராதிகாவின் பிறந்த நாள் பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இவை.