இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா (Suriya) நடித்து வரும், 'எதற்கும் துணிந்தவன்' (Etharkkum Thunindhavan) படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லனாக வினய் நடிக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அப்படம் குறித்த மேலும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி வருகிற ஜனவரி 1-ந் தேதி ஆங்கிலப் புத்தாண்டன்று எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுதவிர இப்படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட்டும் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.