வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள அசுரன் திரைப்படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. அதற்கான வெற்றி விழா இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. 

அதில் படக்குழுவினருடன் சேர்ந்து விநியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தாணு, சிவாஜிக்கு அடுத்து நான் பார்த்து வியந்த ஒரே நடிகர் தனுஷ் தான் என புகழ்ந்து தள்ளினார். இயக்குநர் வெற்றிமாறனும், நடிகர் தனுஷும் தொடர் வெற்றிக்கு சொந்தக்காரர்கள் என பாராட்டினார். 

மேலும் "அசுரன்" படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பார்த்து ரசித்த சம்பவத்தை நினைவு கூர்ந்த் தாணு, அந்த படத்தில் ஒரு சீனில் தனுஷ் ஊர்காரங்க எல்லாருடைய கால்லையும் விழுவார். அதைப் பார்த்த ரஜினி, என்னிடம் அந்த கேரக்டர நான் நடிச்சிருக்கணும் என்று கூறியதாக தெரிவித்தார். படத்தின் இடைவேளை காட்சியை பார்த்துவிட்டு, எழுந்து நின்று "பாட்ஷா, பாட்ஷா" என்று கைதட்டியதாக கூறினார்.