Asianet News TamilAsianet News Tamil

ஒயிட் அண்ட் ஒயிட்டில் செம்ம கெத்தாக சென்னை வந்திறங்கிய சூப்பர் ஸ்டார்.. ஆரத்தி எடுத்து வரவேற்ற லதா ரஜினிகாந்த்

ஒயிட் அண்ட் ஒயிட் உடையில் செம்ம கெத்தாக சென்னை விமான நிலையம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. 

Super star rajinikanth welcomed by wife latha rajinikanth video going viral
Author
Chennai, First Published May 12, 2021, 4:29 PM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 14ம் ஐதராபாத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த பட ஷூட்டிங் நடைபெற்றது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்த ஷூட்டிங்கின் போது அதில் பங்கேற்ற 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. டிசம்பர் 23ம் தேதி ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021 மார்ச் 15ல் மீண்டும்  சென்னையில் தொடங்கியது. முதலில் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

Super star rajinikanth welcomed by wife latha rajinikanth video going viral

தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. கொரோனா 2வது அலை தீவிரமாக உள்ள சூழ்நிலையில் ஷூட்டிங் நடப்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதிக எச்சரிக்கையுடன் படக்குழுவும் செயல்பட்டது. 

Super star rajinikanth welcomed by wife latha rajinikanth video going viral

புயல் வேகத்தில் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்து. இதையடுத்து ரஜினிகாந்த் தனி விமானம் மூலமாக இன்று சென்னை வந்திறங்கினார். ஒயிட் அண்ட் ஒயிட் உடையில் செம்ம கெத்தாக சென்னை விமான நிலையம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து காரில் போஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்திற்கு அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் வாசலிலேயே ஆரத்தி எடுத்து வரவேற்றார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது...

Follow Us:
Download App:
  • android
  • ios