ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "தர்பார்" படத்தை நடித்து முடித்துவிட்டார். டப்பிங் பணிகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில், படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்காக போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் போலீஸ் கெட்-அப்பில் வர உள்ளதால், "தர்பார்" படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து தல அஜித்தின் பேவரைட் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 168 என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ ஷூட்டிங் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி அன்று தொடங்கும் என கூறப்படுகிறது. 

அதன்பின்னர் சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ள படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதனை எல்.கே.ஜி., கோமாளி போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற வெற்றி விழாவில் கூட படம் பற்றிய அறிவிப்பை வெளியிட முயற்சித்தார்களாம். ஆனால் அதை தடுத்து நிறுத்திய சூப்பர் ஸ்டார், சிவாவின் படம் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் எனக்கூறியதாக தெரிகிறது.