சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தன்னுடைய அரசியல் கட்சி குறித்து அறிவித்து, அரசியல் வாழ்வில் தன்னை இணைத்து கொள்வார் என்று காத்திருந்த பலருக்கு பேரதிர்ச்சியாக வெளியாகியுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த், தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கவில்லை என்று வெளியிட்டுள்ள அறிக்கை.

இந்த அறிக்கையை வெளியிடும் போது தனக்கு உள்ள மனக்கஷ்டத்தை விவரிக்க முடியவில்லை என்றும், இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் ரஜினிக்காத ஆரம்பத்தில் மன வலியோடு கூறியுள்ளதாவது... என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம். ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து, மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன். கிட்ட தட்ட 120  பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து, ஒவ்வொருவரையும் தனிமை படுத்தி, முக கவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம். இவ்வளவு கட்டுப்பாடுகளோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது.

உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தார். எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால் எனக்கு இரத்த கொதிப்பில் அதிக ஏற்ற தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தை கொண்டும் என் ரத்த கொதிப்பில் அதிக ஏற்ற தாழ்வு இருக்க கூடாது அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.

என் உடல் நலனை கருதி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு , பல கோடி ரூபாய் நஷ்டம் . இவர் அனைத்துக்கும் கரணம் என்னுடைய உடல் நிலை.

இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன் என,  மன வலியோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.