Asianet News TamilAsianet News Tamil

'தலைவி' படம் பார்த்த தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!! என்ன சொன்னார் தெரியுமா?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'தலைவி' படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிரத்தேயகமாக திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டதாகவும், படத்தை பார்த்து விட்டு அவர் படக்குழுவை வாழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

super star rajinikanth reaction after seeing kangana thalaivi movie
Author
Chennai, First Published Sep 13, 2021, 5:29 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'தலைவி' படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிரத்தேயகமாக திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டதாகவும், படத்தை பார்த்து விட்டு அவர் படக்குழுவை வாழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'தலைவி'. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை பல இயக்குனர்கள் படமாக்க போட்டி போட்ட நிலையில், முதலில் படத்தை இயக்கி செப்டம்பர் 10 ஆம் தேதி அன்று, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

super star rajinikanth reaction after seeing kangana thalaivi movie

மற்ற மொழி ரசிகர்கள் கங்கானாவின் நடிப்பு மற்றும் கதையை கொண்டு சென்ற விதத்தை பாராட்டி வந்தாலும், தமிழில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை பற்றி அறிந்த அரசியல் வாதிகள் சிலர், தலைவி படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை திரித்து கூறியுள்ளதாக தெரிவித்து வருகிறார்கள். மேலும் பல காட்சிகளில் ஜெயலலிதாவை உள்வாங்கி நடிக்காமல் கங்கனா அவராகவே நடித்துள்ளது அப்பட்டமாக தெரிவதாகவும் கூறப்படுகிறது.

super star rajinikanth reaction after seeing kangana thalaivi movie

இப்படி ஒரு சில நெகடிவ் விமர்சனங்கள் வெளிவந்தாலும், இந்த படத்தை இயக்குனர் கொண்டு சென்ற விதம், மற்றும் இந்த படத்தை முடித்திருப்பது போன்றவை நன்றாக உள்ளது என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இந்த படத்தை பார்த்து விட்டு, பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், 'தலைவி' படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக பிரத்தியேக ஷோ போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

super star rajinikanth reaction after seeing kangana thalaivi movie

படத்தை முழுவதையும் ரசித்து பார்த்த ரஜினிகாந்த், இறுதியில் இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு போன் போட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டும் இன்றி, படம் முடித்தபின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு போன் போட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தாராம். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் தன்னுடைய அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த தகவல் தீயாக பரவி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios