ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஸ்கீரின்களில் பிரம்மாண்டமாக திரையிடப்பட உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்பார் படத்தை காண ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். 

முதல் நாள் முதல் ஷோவை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் இரவில் இருந்தே திரையரங்குகளின் வாசலில் காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர். அதேபோல தலைவரின் படத்திற்கு மேலும் மாஸ் காட்டும் விதமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு தியேட்டர்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலி, ஜொலிக்கிறது.

இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரசிகர் ஒருவர் சென்னையில் தான் தர்பார் படத்தை பார்ப்பேன் என்று பிளைட்டில் பறந்துவந்துள்ளார். ஜப்பானில் சூப்பர் ஸ்டாருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். ரஜினிகாந்த், மீனா நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் ஜப்பானில் சூப்பர் ஹிட்டானது. இதனிடையே ஜப்பானைச் சேர்ந்த ரஜினியின் தீவிர ரசிகரான ஹிதேதொஷி என்பவர் சென்னை வந்துள்ளார். 

சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் தமிழக ரசிகர்களுடன் முழு ஆராவாரத்துடன் படத்தை பார்க்க காத்திருக்கிறாராம் ஹிதேதொஷி. ரோகினி திரையரங்கின் உரிமையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த தகவல் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.