super star got angry because of this reason
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா திரைப்படம் பல எதிர்பார்ப்புகளிடையேயும், அதே சமயம் எதிர்ப்புகளுக்கு இடையேயும் ரிலீசாகியது. ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை, இந்த திரைப்படம். இதனை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக நடிக்கவிருப்பது, கார்த்திக் சுப்பராஜாவின் இயக்கத்தில்.

பீசா, ஜிகிர்தண்டா போன்ற திரைப்படங்களை இயக்கிய இவர் தான், தற்போது சூப்பர் ஸ்டாரினை இயக்கவிருக்கிறார். இந்த திரைப்படத்திற்காக தற்போது வட இந்தியா சென்றிருக்கிறது கார்த்திக் சுப்பராஜாவின் குழு.

பொதுவாகவே ரஜினி படம் என்றால் மாஸான வரவேற்பு இருக்கும். ஆனால் காலா அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதற்கு ரஜினி தான் முக்கிய காரணம், சமுதாய பிரச்சனைகள் குறித்து பேசியபோது அவர் கூறிய பொறுப்பற்ற பதில் தான் இதற்கு காரணம், என ஒரு தரப்பினர் கூறினாலும். வேறு ஒரு காரணமும் இருக்கிறது.

தனுஷிற்கும் காலா படத்திற்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தில் ஒரு பங்கு இருக்கிறது. சரியாக அவர் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் ஈடுபடவில்லை என்பதே அது. காலாவிற்கு சரியான ரீதியில் பிரமோஷன் செய்யவில்லை எனும் காரணத்தால், அவர் மீது ரஜினியும் கோபப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
