2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 'சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 4' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தையும், 50 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் பரிசாக வென்றவர் பாடகர் திவாகர்.

பின் இசையமைப்பாளர் டி.இமான் இசையில் பின்னணி பாடகராக, தன்னுடைய இசை பயணத்தை துவங்கி, தற்போது வரை பல வெற்றி படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், அபி என்கிற பெண்ணுக்கும், சென்னையில் நேற்று மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதில் இசையமைப்பாளர் தேவா, அவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவா, விஜய் டிவி பிரபலங்கள் அந்தோணி தாஸ், சூப்பர் சிங்கர் குழுவை சேர்த்தவர்கள் மற்றும் கலக்க போவது யாரு குழுவை சேர்த்தவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அதிலும், குறிப்பாக பாடகர் அந்தோணி தாஸ், திவாகர் மற்றும் அபி தம்பதிகளுக்கு வெங்காய கூடையை பரிசளித்தது அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது.  அதேபோல் கலக்கப்போவது யாரு குழுவில் இருந்து வந்தவர்கள் கொசு பேட்டை இருவருக்கும் பரிசளித்து பிரபம்மிக வைத்தனர். எதிர் பாராத இந்த பரிசு பார்ப்பவர்களுக்கு காமெடியாக இருந்தாலும், மணமக்களை சற்று காண்டாக்க செய்தது.

பாடகர் திவாகர் விஜய் டிவி மூலம் அனைவராலும் அறியப்பட்டாலும், இதற்கு முன்பே 'சரி கம பா 2009 சேலஞ்ச்', 'ஹரியுடன் நான்', 'சங்கீத மஹா யுத்தம்', போன்ற பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். 

மேலும் தற்போது பல திரைப்படங்களில் பின்னணி பாடி வருகிறார் சமீபத்தில் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் 'வாரே வாரே சீமராஜா' பாடல் அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது .