'சூப்பர் டீலக்ஸ்' படத்தை பற்றிய சென்சார் தகவல் தற்போது வெளியாகி, ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. 

'சூப்பர் டீலக்ஸ்' படத்தை பற்றிய சென்சார் தகவல் தற்போது வெளியாகி, ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில், 'ஆரண்ய காண்டம்' படத்தை தொடர்ந்து, வெளியாக உள்ள திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்' இந்த படத்தில், விஜய் சேதுபதி முதல் முறையாக திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். 

மேலும் நடிகை சமந்தா, மாற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் துணிச்சலான வேடத்தை தேர்வு செய்து நடித்து நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, சென்சார் சான்றிதழுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த படத்தை முழுவதையும் பார்த்த, படக்குழுவினர்... படத்தில் எந்த கத்தரியும் போடாமல், ' A ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 : 55 , என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.