நடிகை சன்னி லியோனை  இந்தியாவில் உள்ள பல இளைஞர்களுக்கு பிடிக்கும் இதனாலேயே இவரை   தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை . இவர் தமிழில் கூட நடிகர் ஜெய் நடித்த  வடகறி என்ற படத்தில் ஒரு பாடளுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார்.

இந்நிலையில் இளைஞர்கள்  தற்போது ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று முழு மூச்சுடன் போராடி வருகின்றனர் அதே சமயம் பீட்டா அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் .
 
இளைஞர்கள் எதிர்க்கும் பீட்டா அமைப்பின் தூதராக சன்னி லியோன் செயல் பட்டு வருகிறார் , இதனால் தான் இளைஞர்கள் கோபம் முழுமையாக சன்னி மீது திரும்பியுள்ளது.

மேலும்  இவருக்கு சமீபத்தில் பீட்டா  இந்த வருடம் இவருக்கு  பீட்டாவின்  சிறந்த விளம்பர தூதர் என்று தேர்ந்தெடுத்து விருது கௌரவித்துள்ளது, இதற்கு அவர் நன்றி தெரிவிக்க, தமிழகத்தை சார்ந்தோர் பலர் தங்கள் கோபங்களை பதிவு செய்து தாறு மாறாக திட்டி ட்வீட் செய்துள்ளனர். 

காரணம் ஜல்லிக்கட்டை ஆரம்பத்திலிருந்து பீட்டா  தான் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது