sunny leyone dance show in chennai

பாலிவுட் நாயகி சன்னி லியோனுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் திரைப்படங்களில் நடிப்பது மற்றும் இன்றி, பல்வேறு நிகழ்ச்சிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதே போல் இவர் மீண்டும் சென்னையில் டிசம்பர் 2 தேதி நடைபெற உள்ள ஒரு நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாட உள்ளார்.

இதே போல் சமீப காலமாக, கோலிவுட்டில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்கும் கோலிவுட் சன்னி என செல்லமாக அனைவராலும் அழைக்கப்படும் ஆண்ட்ரியாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ளார். 

மேலும் சன்னி லியோன், ஆண்ட்ரியா பாட போகும் பாடலுக்கு, இந்த நேரடி நிகழ்ச்சியில் நடனமாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.