சன்னி

கனடாவை சேர்ந்த நடிகை சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.இவர் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்.

எதிர்ப்பு

2012 ம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம்2 என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கால் பதித்தார்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.இவரின் ஆபாச வலைத்தளத்தால் இந்தியாவில் இவர் இருக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது.
தற்போது ஆபாச படங்களில் நடிப்பதை கைவிட்டு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

மெழுகு சிலை

டேனியல் வேபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.மேலும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.இவருடைய மெழுகு சிலை டெல்லி மேடம் டுசாட் மியூசியத்தில் நிறுவபட உள்ளது. 

தமிழ்

இந்நிலையில் தற்போது சன்னி தமிழில் விரமாதேவி என்ற சரித்திர பின்னணி கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக சன்னி தமிழ் கற்று வருகிறாராம்.மேலும் இந்த படத்துக்காக வாள்சண்டை பயிற்சி,குதிரை பயிற்சி போன்றவற்றை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கற்று வருகிறார்.