பாலிவுட் நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள வீடியோவை ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் அதிமகானோர் பார்த்து ரசித்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

 

ஒரு காலத்தில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமாகி இப்போது பாலிவுட் என திரையுலகை கலக்கி வருபவர் சன்னி லியோன். தமிழில் சில படங்களில் நடித்துள்ள இவர் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் அவர் கடந்த ஆண்டு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தனது செயல்பாடுகளை வீடியோவாகவும் பகிர்ந்து வருகிறார். அதேபோல சன்னிலியோன் அவரது கணவர் டேனியல், குழந்தை நிஷா, இரட்டை குழந்தைகள் நோஹா, அஸர் ஆகியோர் மகிழ்ச்சியாக உள்ள புகைப்படங்களை வீடியோவாக தொகுத்து தனது இண்ஸ்ட்ரா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.&nbs

p;

 

அதில் தனது இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினேன். கடந்த ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டாக மாறி விட்டது. உலகில் இந்த உணர்வுப்பூர்வமான தருணத்தை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் வெளியிட்ட ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். 4 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 37 ஆயிரம் பேர் வாழ்த்து கூறி கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.