ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், 2012ம் ஆண்டு வெளியான "ஜிம்ஸ் 2" என்ற படம் மூலம் பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'ஜாக்பாட்', 'ராகினி' 'எம்.எம்.எஸ்.2', 'ஹேட் ஸ்டோரி 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் சன்னி, தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரே பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார். 

இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

கூகுளில் அதிகம் தேடப்படும் நபர்களில் முதலிடம் பிடித்துள்ள சன்னி லியோனுக்கு இந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டாலும், ரசிகர்களை ஹேப்பியாக்குவதற்காக தனது ஹாட் போட்டோஸை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். சினிமா, விளம்பர படங்கள் என படு பிசியாக இருக்கும் சன்னி லியோன், தற்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். 

இதையும் படிங்க: என்னடா பண்ணி வச்சிருக்கீங்க... கொரோனா போண்டாவுக்கு போட்டியா கொரோனா பர்கர்...!

இந்நிலையில் மராத்தி புத்தாண்டை கொண்டாடிய சன்னி லியோனின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரம்மாண்ட விநாயகர் சிலை முன்பு பட்டுப்புடவை கட்டி, தலை நிறைய மல்லிகை பூ வைத்து, நெற்றில் அழகான பெட்டு வைத்து சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: ஊரடங்கிலும் கட்டுக்கடங்காத கிரண்... கொரோனாவை விட மிரட்டும் கவர்ச்சி..!

கொரோனா பீதியால் களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சன்னி லியோனின் இந்த சூப்பர் போட்டோ தனி விருந்தாக அமைந்துள்ளது. மேலும் தமிழ் பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு அசத்தலாக இருக்கும் சன்னி லியோனின் புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.