சினிமா துறையில் நுழைந்த பின்னர் நடிகை சன்னி லியோன் தன்னுடைய நடிப்பு  மற்றும் நடன  திறமையால்  பாலிவுட்டில் தனக்கென ஒரு தனி  இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படும் பிரபலங்களில் முன்னணியில் இருப்பவர் சன்னிலியோன்  என்பதை அனைவரும் அறிவர் , இந்த ஆண்டு இந்திய அளவில்  கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில்  சன்னிலியோன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள்   சல்மான் கான் , ஷாருக்கான் உள்ளிட்டோரையும் சன்னி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
  
சன்னி லியோன் தொடர்பான பெரும்பாலான தேடல்கள்  அவரின் வீடியோ உடன் தொடர்புடையதாக உள்ளது, என கூகுல் ட்ரெண்ட் அனலிட்க்  தெரிவிக்கின்றன. அத்துடன் அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான கரன்ஜித் கவுர் :-  தி ஹன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன்னை மக்கள் அதிகம் அறிந்துள்ளனர்,


பெரும்பாலும் வடகிழக்கு மாகாணங்களான மணிப்பூர், அசாம் மாநிலத்தவர்கள் சன்னி லியோனே அதிகம் தேடியுள்ளனர் என்பது  தெரியவந்துள்ளது. 

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சன்னிலியோன் என்னுடைய  ரசிகர்கள் எனக்கு கடவுள் மாதிரி என  கூறியுள்ளார். இது ஒரு அற்புதமான உணர்வு என்று தெரிவித்த சன்னி,  ரசிகர்கள்தான் தன்னை வாழ வைக்கின்றனர் என கூறியுள்ளார், 

கடந்தாண்டும் சமூகவலைதள தேடல்களில் பல பிரபலங்களை பின்னுக்கு தள்ளி  சன்னிலியோன் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.