தெலுங்கு திரையுலகில் 2010ம் ஆண்டு வெளியான “அந்தாரி பந்துவையா” என்ற படத்தில் முக்கியமாக கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் திலீப்பின் ‘நா சாமி ரங்கா’, ராமின் ‘ ஹைப்பர்’, ராணா டகுபதியின் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ என அடுத்தடுத்து சில நேனே நடித்தார் நடிகை பிரியங்கா நல்காரி. மெல்ல சீரியல் பக்கம் காலடி எடுத்து வைத்தார். 

 

தெலுங்கில் பிரபலமான ஈ டிவியில் வெளியான ‘மேகமாலா’ என்ற சீரியலிலும், ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவணா சமீராலு’ என்ற சீரியல் மூலமாகவும் பிரியங்காவை பலரும் அறிய ஆரம்பித்தனர். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா நல்காரியோடு நடிகை வடிவுக்கரசி, சுகுமார், வெங்கட், ஷாமிலி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 600 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

இதையும் படிங்க: கொழு, கொழு குழந்தை முதல் ‘குட்டி’ நயனாக மாறியது வரை... அனிகாவின் யாரும் அதிகம் பார்த்திடாத போட்டோஸ்....!

சோசியல் மீடியாவில் பிற சின்னத்திரை ஹீரோயின்களைப் போலவே பிரியங்காவும் செம்ம சுறுசுறுப்பாக வலம் வருகிறார். தன்னுடைய போட்டோ மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார். தற்போது குட்டை பாவாடையுடன் ஆங்கில பாடலுக்கு அசத்தலாக நடனமாடியுள்ள பிரியங்கா நல்காரியின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...