கொரோனா லாக்டவுன் நேரத்தில் வீட்டிற்குள் முடங்கி கிடந்த சீரியல் நடிகைகள் பலரும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். வெள்ளித்திரை ஹீரோயின்களுக்கே சவால் விடும் விதமாக போட்டோஷூட், ஹாட் டான்ஸ் வீடியோ என சோசியல் மீடியாவை தெறிக்கவிடுகின்றனர். அப்படி விதவிதமாய் போட்டோ ஷூட்டில் கலக்கிய சின்னத்திரை நாயகிகள் பலருக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. 

அந்த வரிசையில் தற்போது பிரபல சீரியல் நடிகையும் இணைந்துவிட்டார் போல் தெரிகிறது. சன் டி.வி.யில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த தொடராக “கண்மணி” சீரியல் உள்ளது. சஞ்சீவ் ஹீரோவாக நடித்து வரும் இந்த சீரியலில் லீசா என்பவர் சவுந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சவுந்தர்யா - கண்ணன் ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அதுவும் லீசாவின் புடவை அழகை ரசிப்பதற்காகவே ரசிகர்கள் பட்டாளம் டி.வி. முன்பு காத்துகிடக்கும். 

 

இதையும் படிங்க:  “மக்கள் திலகத்தின் மறு உருவமே”... மீண்டும் எம்.ஜி.ஆர். கெட்டப்பில் விஜய்... சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்...!

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் லீசா, தனது போட்டோக்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். தமிழ் சினிமாவின் பல ஹிட்டு பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது  “சாமி” படத்தில் இடம் பெற்ற கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? பாடலுக்கு இடுப்பை வளைத்து நெளித்து அவர் போடுற ஆட்டம் செம்ம வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...