தளபதி விஜய்,  'பிகில்' படத்தின் வெற்றியை அடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது 64 வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் உரிமையை, பிரபல சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏற்கனவே விஜய், இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக மிக பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட, பிகில் படத்தை கைப்பற்றிய சன் டிவி நிறுவனம் அடுத்ததாக உருவாகி வரும் தளபதி 64 படத்தையும் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள், தலைநகர் டெல்லியில் நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா படத்தொகுப்பு செய்கிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகர் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். நடிகர் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சர்கார், பிகில், திரைப்படங்களை தொடர்ந்து சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.